காதல்
நீ என்னை மறந்து போன பின்னும்
உன்னை மறக்கா என் பாவி மனம்
உன்னையே நினைந்தின்னும் ஏங்குதடா
உன்மேல் நான்கொண்ட காதலை
என்மனம் மறக்க முடியாது போக
நீ இன்னும் என்முன் நிழலாய் நிற்கிறாய்
நீயோ உன்மனதை வேறு எங்கு பறிகொடுத்தாயோ
நான் அறியேன் ,ஆனால் ஒன்று மட்டும்
எனக்குள் என் உள்மனம் சொல்லுதடா
எல்லாம் அலுத்து போனபின் உண்மையை
நீ உணர்ந்து என்னைத் தேடி வருவாய் ஒருநாள்
அதுவரை காத்திருப்பேனடா நான் கண்ணுறங்காது
உன் வரவிற்காய் என்னுயிரை கையிலேந்தி
உன்மீது நான்கொண்ட காதல்- நந்தாவிளக்காய்!