கல்வி அன்றும் இன்றும்

ஒற்றை துண்டுடன்
,,,,,,ஒழுக்கமே முதலாய்
கைகட்டி கண்ணியமாய்
குருகுலம் -அன்று!
அன்னியர் தலையீட்டால்
அனைத்தும் ஆங்கிலமயமாய்
தொழில் நுட்ப அறிமுகத்தால் இன்று
கற்பவை எல்லாம்
கணினி மயம்
நாகரீக குறுக்கீட்டால்
கேட்டரிங், க்ளோனிங் டிசைனிங்
என பட்டியல் நீண்டாலும்
இன்றைய போட்டி உலகில்
கல்வி -மூளையை அடகுவைத்து
முதுகுக்கு பின்னால்
விலை பேசும்
தரகு வியாபாரமாய் இன்று!,

எழுதியவர் : ச . சந்திரா (26-Oct-17, 11:55 am)
Tanglish : kalvi anrum intrum
பார்வை : 7478

மேலே