கடிமலரோ இதழ்மலரோ

நானிலை வென்ற
நற்குணா!
நானிலமேத்தும்
பொன்வண்ணா!
நாண்நெடு மடவார்
நீள் கனா!
நிகாதர்தம் நித்திரைதின்
ஏகனோய்!
மலையவன் மார்பொதி
சாந்துதிர் மணமன்ன
மழைப்பொழி சாரலில்
முகிழ்த்த அம்
முளர்பற்றி
புலியவன் பொன்னியன்
அமரிடை வாளியாய்
நெடுங்கான் தூர்த்திட்ட
மஞ்ஞையர் வழிப்பற்றி
கதிரடி கயலன்ன
நின்னவை ஏகுங்கால்
பொருநை புகழன்ன
கடிமலர் விலக்கிட்டு
தீந்தமிழ் சுவையன்ன
இதழ்மலர் கொய்தோயே!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (26-Oct-17, 12:51 pm)
பார்வை : 247

மேலே