நான் உனக்காக
காலை வெயிலில் உன் மென் முகம் சிவப்பதை கண்டேன்.
உன் கண் மூடா நேரத்தில் உன் கரு விழியில் நுழைந்தேன்.
உன் நித்திரையில் சின்ன சொற்பனமாய் வந்து உன் நித்திரை கெடுப்பேன்.
உன் இடை மடிப்பை என் விரல் கொண்டு பிரிப்பேன்.
உன் கால் விரல்கள் மீட்டுவதற்கு சின்ன வீணை ஒன்று செய்துடுவேன்.
நீ சிந்தும் சிறு வியர்வைத் துளிக் கொண்டு சின்ன விவசாயம் பண்ணிடுவேன்.
பல நூறு பூக்கள்க் கொண்டு உனக்கு சின்ன பூச்சென்டு செய்துடுவேன்.
சிற்பி தொடா உளிக் கொண்டு உன்னை மேலும் செதுக்கிடுவேன்.
செதுக்கி எடுத்த உன் உருவச் சிலைக்கு சின்ன ஆலயம் கட்டிடுவேன்.
அந்நொடி முதல் உன் ஆலயத்திற்கு அர்ச்சகனாய் இருந்திடுவேன்.