தாய்

பெற்ற மக்களே தன்னை நிந்தித்து மறந்தாலும்
தாயவள் அவர்களை நிந்திப்பதில்லை, மறப்பதில்லை
மாறாக எங்கோ எப்படியோ அவர்கள் வாழ்வாங்கு வாழவே
நாள்தோறும் வாழ்த்திநிற்பாள் தாயவள்
இல்லை என்பவரையும் , உள்ளான் என்பவரையும்
காத்துநிற்கும் கடவுள் போல -அதனால் அல்லவோ
தாயவள் தேய்வமாய்ப் போற்றப்படுகிறாள்
மண்ணில் நடமாடப்பினும் தெய்வம் தாயே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Oct-17, 6:23 pm)
Tanglish : thaay
பார்வை : 691

மேலே