பால்ய நினைவுகளிலிருந்து

தினம் தினம் புது புது ஆட்டம்
தினம் தினம் பல பல வாழ்க்கை

ஆயிரம்கண்ட அந்த சிறு வயது
வேண்டாம் என்று சொல்வது யாரு.,

செருப்பு அது அணியவில்லை
காடு மலை என சுற்றும் போது.

ஆடை அது அறவே இல்லை
கோடைமழையில் குளித்திடும் போது.

மின்மினிபூச்சியின் வெளிச்சத்தில்
கண்ணாம்பூச்சி ஆடிடும் ஆட்டம்
மீண்டும் ஒருமுறை வந்தால்
வேண்டாம் என்பேன் மரணம்

பனைஓலை வீடு கட்டி
பல வீட்டு அரிசி சேர்த்து
கூட்டாக நாம் செய்யும் சமையல்
குழம்பு அது தேவையில்லை

பள்ளிக்கூடம் ஆசை இல்லை
பசி என்பதே வந்ததில்லை
திருடித்தின்ன மாங்காயின்
சுவையும் இன்னும் மறக்கவில்லை
அதன்
சுவடும் இன்னும் அழியவில்லை

குதிகால் ஊன்றி பெருவிரலால்
உலகை
வட்டமிட்டு சுற்றிவந்த காலமது
முழுதாய் சுற்றிமுடித்தவர்களில்
நானும் ஒருவன்.

எழுதியவர் : மகேந்திரன் (28-Oct-17, 6:04 pm)
பார்வை : 130

மேலே