அவன் இங்க வாடி

அவன், அவன்!
😊😊😊😊
எவன் பாட்டிம்மா?
😊😊😊😊😊😊
அவன், இங்க வாடிச் செல்லம். பூப்பறிச்சது போதும்டி.
😊😊😊😊😊
என்னங்க பாட்டிம்மா, நான் வந்ததுகூடத் தெரியாம "அவன், அவன்" -ன்னு சொன்னீங்க. அவன்-ன்னும் சொன்னீங்க கூடவே 'வாடிச் செல்லம்", "பூப்பறிச்சது போதும்டி" -ன்னும் சொன்னீங்க? உங்களுக்கென்ன பித்துப்பிடிச்சுப் போச்சா?
😊😊😊😊😊
வாடி செந்தாமரை. என்னப் பாத்தா பித்துப்பிடிச்ச மாதிரியா தெரியுது.
😊😊😊😊
சரிங்க பாட்டிம்மா. "அவன்" -ன்னு எதுக்குச் சொன்னீங்க?
😊😊😊😊😊
பீக்காருல இருந்து எம் பேரன் வேலுமணி வந்திருக்கிறான். அவனும் அவன் மனைவி அழகியும் கடைத் தெருவுக்குப் போயிருக்கிறாங்க. எஞ் செல்லக் கொள்ளுப் பேத்திய வீட்டுள்ள விட்டுட்டுப் போயிட்டாங்க. என் அழகுச் செல்லம் வீட்டுத் தோட்டத்தில பூப்பறிச்சிட்டு இருக்குறா.
😊😊😊😊
சரி "அவன்" யாரு? எவன்?
😊😊😊😊😊
எங் கொள்ளுப் பேத்தி பேருதாண்டி தாமரை 'அவன்'.
😊😊😊😊😊
இது என்ன அநியாயமா இருக்குது? 'அவன்' -னு யாராவது ஒரு குழந்தைக்குப் பேரு வைப்பாங்களா?
அதுவும் ஒரு பெண் குழந்தைக்கு?
😊😊😊😊
நான் என்னத்தடி கண்டேன் செந்தாமரை. இந்தப் பேரு பல மொழிகள்ல இருக்குதாம். அழகான அர்த்தம் உள்ள பேராம். இந்தப் பேரு இந்திலயும் இருக்குதாம்.
😊😊😊😊😊😊
என்ன இருந்தாலும் உங்க ஆழகான கொள்ளுப் பேத்திக்கு ஒரு ஆழகான தமிழ்ப் பேரா வச்சிருக்கலாம்.
😊😊😊😊😊
அடியே செந்தாமரை, நம்ம பட்டிக்காட்டிலகூட உம் பேரத் தவிர இருபது வயசுக்கும் கீழ உள்ள அத்தனை பசங்க பொண்ணுங்க பேருங்களும் இந்திப் பேருங்க தான். எதோ உங்கப்பன் ஒருத்தன்தான் உனக்குத் தமிழ்ப் பேர வச்சிருக்குறான். ஒண்ணும் சொல்லறதுக்கில்லடி. காலம் மாறிப்போச்சுடி
😊😊😊😊😊😊
"■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Avan = beautiful, fair form
(Iranian (Persian), Sanskrit, Scottish, English, Hebrew, Indian, Spanish, Biblical origin)

எழுதியவர் : மலர் (28-Oct-17, 10:24 pm)
பார்வை : 390

மேலே