மெருசலு
ஏண்டா பேரப்பையா ஏழுமலை உன் மனைவிக்கு முதல் பிரசவத்திலேயே அழகான குழந்தை பிறந்திருக்குது. அதுவும் ஆண் பிள்ளை. உன்ன மாதிரியே அழகா இருக்குது. பிறந்து பத்து நாலு ஆகுது இன்னும் பேரு வைக்காம இருக்கற?
😊😊😊😊😊😊
அதுதான் பாட்டிம்மா குழப்பமா இருக்குது. என்ன பேர வைக்கறதுன்னே தெரீலீங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
என்னடா பேசற? நாட்டு நிலவரத்துக்குத் தக்கபடி பேரு வைக்கறதுதாண்டா புத்திசாலித்தனம். இப்பெல்லாம் நம்ம தமிழர்கள் யாருமே பெத்த குழந்தைங்களுக்குத் தமிழ்ப் பேர வைக்கறதில்லை. மத்தவங்க மாதிரி ஏதாவது ஒரு வேற மொழிப் பேர எஞ் செல்லக் கொள்ளுப் பேரனுக்கு வச்சிருடா.
😊😊😊😊😊😊
சரிங்க பாட்டிம்மாமா, நீங்களே உங்களுக்குப் பிடிச்ச வேற மொழிப் பேரச் சொல்லுங்க.
😊😊😊😊😊😊😊😊
அர்த்தம் தெரியுதுதோ இல்லையோ எல்லாரும் இந்திப் பேரத்தானே வைக்கறாங்கடா ஏழுமலை. இப்ப விசைங்கறவரு நடிச்ச மெருசலுங்கற படத்தைப்பத்திதானே தொலைக் காட்சி செய்தில சொல்லறாங்க; விவாதமும் படத்தறாங்க. இவ்வளவு பிரபலமா இருக்குற இந்த மெருசலையே எங் கொள்ளுப் பேரனுக்கு வச்சிருடா.
😊😊😊😊😊
சரிங்க பாட்டிம்மா. :மெர்சல்' -லும் நம்ம ஊர்ல யாருக்கும் அர்த்தம் தெரியாத பேருதான். நாளைக்கே நகரசபை அலுவலகத்துக்குப் போயி இந்தப் பேர பதிவு பண்ணிட்டு வந்திருவேன். ரொம்ப நன்றீங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.