நெப்பந்தஸ் பெண்ணே

நெப்பந்தஸ் பெண்ணே!
உன் இதழால் என்னை கொல்லாதே
தினமும் என்னை திண்ணாதே

அழகே!
உன் கண்ணால் என்னை
திருடும் பார்வை பார்க்காதே -அது
தினமும் என்னால் தூங்காதே

வேற்றுக்கிரகவாசி நான்
பறக்கும் தட்டில் உன்னை
தூக்கிக்கொண்டு போவேன்
வெற்று ஆர்பிட்டால் போலே - அனுவே
உன்னை சுற்றி நானும் வருவேன்

கட்டபொம்மன் நானே
கப்பம் கட்ட மாட்டேன்
கடவுள் எதிரே வந்தாலும்
கண்டுகொள்ள மாட்டேன்

உன் நாட்டிய அழகைக் கண்டேன்
நீ ஆர்கஸ்பீசன்ட்தானடி
உன் நாவிலிருக்கும் உமிழ் நீரிலும்
நச்சு உள்ளதடி
என்னைக் கொல்லுதடி

சீனாவின் மஞ்சள் நதியா -இல்லை நீ
நான் உண்ணும் மயக்கமருந்தா?

செதில்கள் இல்லா செம்மீனே - உன்
செதுக்கிய மார்பினுள்ளே வீசிய
நங்கூரம் அது நான்தானே

நாணத்தால் உருவான பெண்மை நீ!
நாஞ்சில் தோட்டத்து பேரழகி நீ!
மோகத்தில் நீயும் திளைக்க
முதுகெலும்பில்லா உயிரினம் நீ

கொக்கை தேடும் மீனோ? - இல்லை
புலியை தேடும் மானோ?
கொத்திப் போய்விட்டாய் என்னை
கொங்கு நாடு அரசி நீ

மஞ்சுவாக நீ மலையைத் தொட்டு ரசித்தாய்
மறைந்து போய்விட்டேனோ நான்
உன் மையலழகைக் கண்டு

சாக்கடல் அது ஆழமில்லை
மழைதுளி அதில் வாசமில்லை
உன் மனம் அது ஆழமடி
உன் மேனி முழுவதும் என் வாசமடி...

எழுதியவர் : மகேந்திரன் (29-Oct-17, 8:32 pm)
பார்வை : 151

மேலே