“பிறை“ Crescent

யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரியில் இருந்து புத்தளத்துக்கு பி ஏ பட்டதாரியான நான் ஆசிரியையாக 1995 ஆம் அண்டு மாறுதல் கிடைத்து போனபோது எனக்கு ஒரு பயமா இருந்தது. . யாழ்ப்பாணத்தில் இருந்து போர் காரணமாக புத்தளத்துக்கு புலம் பெயர்ந்த பல இஸ்லாமிய குடும்பங்கள் அங்கு வாழ்வதால் நான் ஒரு “பனங்கொட்டை” என்று அவர்கள் அறிந்தால் என்னோடு எப்படி பழகுவார்கள் என்ற பயம் எனக்கு. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தவர்களை பனங்கொட்டை என்று பிற ஊர் வாசிகள் நக்கலாகச் சொல்வது வழக்கம். “எத்தளம் போனாலும் போனாலும் புத்தளம் போகாதே அப்படிப் போனாலும் புத்தியோடு நட “ என்று இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் சொன்னது என் நினைவுக்கு வந்தது.
இலங்கை பரிபாலன சேவையில் இருக்கும் எனது கணவர் தேர்தல் அதிகாரியாக புத்தளம் கச்சேரிக்கு மாறுதல் பெற்று சென்றதால் அந்த மாறுதலை சந்தோசத்தோடு வரவேற்றேன். கணவருக்கு போல்ஸ் வீதியில் மூன்று அறைகள் உள்ள வசதியான வீடு கொடுத்தார்கள். அவர் நடந்தே கச்சேரிக்குப் போவார் . எங்கள் வீட்டில் இருந்து நானூறு யார் தூரத்தில் அவர் வேலை செய்த அலுவலகம் இருந்தது எனக்கு மாற்றம் கிடைத்தது பாத்திமா மகளிர் கல்லூரிக்கு . இங்கு படித்த சுமார் 400 மாணவிகளில் 90 விகிதம் இஸ்லாமிய மாணவிகள் . அக் கல்லூரியின் பிரின்சிப்பலாக இருந்துவர் ஜெசீமா இப்ராகிம். அவரும் ஒரு பட்டதாரி. எனக்கு சில வருடங்கள் சீனியர் . அவரின் பிறப்பிடம் கிழக்குமாகணத்தில் உள்ள ஊரான கல்முனை ஜெசீமா நல்லொழுக்கத்தை கல்லூரியில் மாணவிகளில் கடைபிடிப்பவர் அவருடய

கணவர் ஒரு வழக்கறிஞர்
. அவர் ஏறாவூரில் பிறந்தாலும் . முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் புத்தளத்தையே தனது தொழிலுக்கு தேர்ந்து எடுத்தார். சிங்களம் சரளமாக் பேசுபவர், அதனால் தமிழ் சிங்களம் பேசும் புத்தளப் பகுதில் வாழும் மக்களிடையே அவருக்கு நல்ல வரவேற்றபு இருந்தது.. எனக்கு ஜெசீமாவை வெகுவாக பிடித்துக்கொன்டது காரணம் அவவின் கட்டுப்பாடும். அமைதியான பேச்சும் , அழகிய தமிழ் உச்சரிப்பும் கல்லூரியில் அரசியல் பேசப்படாது என்று அவர் ஆசிரியர்களுக்கு கட்டளை இட்டார். அதனால் நான் தப்பினேன் அங்கு உயர்தர வகுப்புகளுக்கு தமிழ்,, வரலாறு.. ஊடகவியல் , பொருளாதாரம் ஆகிய பாடங்களை எடுக்கவும் ஏ லெவல் முதலாம் ஆண்டு வகுப்புக்கு ஆசிரியையாவும் அவர் என்னை நியமித்தார். என் வகுப்பில் சுமார் இருபது மாணவிகள். பெரும்பாலோர் இஸ்லாமியர்கள். அந்த மகளிர் கல்லூரியில் நான் ஒருத்தியே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து ஆசிரியை. இரு சிங்கள ஆசிரியைகளும் வேலை செய்தார்கள் மற்ற ஆசிரியைகள் எல்லோரும் இஸ்லாமிய மதத்தவர்கள். மொத்தமாக தலமை ஆசிரியை உட்பட 12 ஆசிரியைகள் அக் கல்லூரியில் படிப்பித்தார்கள். ஆசிரியைகள் அரை மணி நேரம் சந்தித்து பேச ஒரு ஆசிரியைகளுக்கென ஒரு தனி அறை இருந்தது. ஆசிரியைகள் தங்கள் எடுக்கும் எடுக்கும் பாடங்கள் பற்றி பேசும் போது. நான் ஒரு இரண்டாம் உயர் நிலை ( Second Upper Calass ) பி ஏ பட்டதா’ரி என அறிந்த ஆசிரியைகளில் ஒருத்தி, என்னை பார்த்துக் கேட்டாள் : “ஈஸ்வரி டீச்சர் நீங்கள் இவ்வளவு படிப்பில் கெட்டிக்காரி என்றால் ஏன் பரிபாலன சேவைக்குள் போய் இருக்கவில்லை நல்ல சம்பளம் கிடைத்து இருக்குமே காலப் போக்கி;ல் அரசாங்க அதிபராக வந்திருக்கலாமே:”

“ அது எனக்குச் சரிப்பட்டு வராது. அரசியல்வாதிகள் சொல்வதுக்கு தலை ஆட்ட வேண்டும். சுதந்திரமாக் முடிவு எடுக்க முடியாது. திறமையுள்ள மாணவ மாணவிகளை ஊக்குவித்து அவர்கள் விரும்பிய தொழில் செய்து சிறந்து விழங்க வழி காட்ட வேண்டும் என்பது என் கொள்கை” நான் பதில் சொன்னேன்

*****

அன்று கல்லூரியில் எனக்கு முதலாம் நாள் . என்னை ஈஸ்வரி டீச்சர் என மாணவிகளுக்கு அறிமுகபடுத்தினேன் என் வகுப்பு மாணவிகள் ஒவ்வொருவரிடம் நீங்கள் என்னவாக வர விரும்புகிறீர்கள் என்று கேட்டேன் ஒவ்வோரும் பல விதமான பதில்களை சொன்னார்கள்.
முதல் வரிசையில் இருந்த அகீலா என்ற மாணவி சொன்னாள்
“எனக்கு டாக்டரக வர எனக்கு வர விருமப்பம் டீச்சர்”
‘ஏன் ?: ;
“நல்லாக காசு சம்பாதிக்கலாம் “
“நீ தியானாவா”?
“ஓம் டீச்சர் “
“உன் விருப்பம் என்ன” .?,
“ எனக்கு கம்பியூட்டர் என்ஜனியராக வர விருப்பம். அப்பத்தான்; அமெரிக்காவுக்கு போகலாம். நிறைய காசு சம்பதிக்கலாம் ”
“அதி சரி உன் பெயர் என்ன “ அடுத்த மாணவியை கேட்டேன்”
“ நதியா டீச்சர் “
“ அது ஒரு சினிமா நடிகை பெயர் ஆச்சே “?
“ நானும் நதியா . தபு . ஜாஸ்மின் . நக்மா, ஜியோதிகா போல் நடிகையாக வர ஆசை படுகிறேன்”
“நதியா நீ ஒரு முஸ்லீம் பெண் என்று மறந்து விடாதே “ என்றேன் நான்
“ டீச்சர் அவர்களும் முஸ்லீம் பெண்கள் தான் “
நான் பதில் சொல்லவில்லை
இப்படி பல மாணவிகளிடம் இருந்து அக்கௌன்டன்ட் .யூனிவர்சிட்டி லெட்சரர் நேர்ஸ் , வழக்கறிஞர்,. அரசியல்வாதி எனப் பதில்கள் வந்தன
பத்திரிய்யா என்ற மாணவி சொன்ன பதில் சற்று வித்தியாசமனது “எண்டை . வாப்பாவுக்கும், உம்மாவுக்கும் பிடித்த வேலை செய்வேன் என்றாள் .
இன்னோருத்தி சொன்னாள் “நான் என் காக்காவின் புடவைக் கடையில் உதவியாக இருப்பேன்”

பஹீஜா என்ற மாணவி “ டீச்சர் . நான் விடும்பியவனை நிக்கா செய்து அவர் விரும்பும் ஆணம் செய்து அவருக்கு கொடுப்பேன்” என்றாள் கூச்சமின்றி சிரித்தபடி..-

“:அப்போ பஹீஜா உனக்கு எதாவது ஒரு பெடியன் உன் மனதில் இப்ப இருகிறானா” ?
வகுப்பு முழுவது கொள் என்று சிரித்தது,
“: இல்லை டீச்சர் இனித்தான் பார்க்கவேண்டும் “ என்றாள் அவள் சூடியாக
பஹீஜாவுக்கு பக்கத்தில் இருந்த மாணவியை பார்த்து “நீ தான் புத்தளம் புத்தளம் நகர சபை சேர்மனின் மகள் கதீஷாவா “ நான் கேட்டேன்
“ இயஸ் டீச்சர்” என்றாள் ஆங்கிலத்தில்.
“ உன் விருப்பம் என்ன”?
“என் வாப்பாவைப் போல் சேர்மனாக விருப்பம் டீச்சர்”
கதீஷாவுக்கு பின்னால் அமைதியாக இருந்த ஒரு மாணவியைப் பார்த்து

கேட்டேன் “ நீ அமைதியாக இருக்குறாயே உன் பெயர் என்ன”?

அவள் உடனே இருந்த இடத்தில் இருந்து எழும்பி நின்று
“ என் பெயர்ர அரிய்யா டீச்சர் “

“ அப்படி என்றால் ..”?

“ஆழ்ந்த அறிவுள்ளவள் என்பது அர்த்தம் டீச்சர்:”

“அப்படி என்ன அறிவாளியாகப் போகிறாய்.”?:;

“ நான் எழுத்தாளராக வர விருப்பம்”:.

“அதோடு தொடர்புள்ள தொழில் எதாவது செய்ய நீ விரும்புகிறாயா.”?

“:ஊடகத் .துறையில் செய்தியாளராக வேலை செய்ய விருப்பம்”.

“ அதன் பிறகு “?

“சொந்தப் பத்திரிகை ஓன்று நடத்த விருப்பம்”.

“அதுக்கு ஏராளமான பணம் தேவையே “

“பேருவளையில் இரத்தின கல் வியாபரம் செய்யும் என் உம்மாவின் காக்கா ஹமீது மாமா தருவார். அவருக்கு நான் எழுதும் கதைகள் பிடிக்கும். வாசித்து விட்டு சில நேரம் காசும் தருவார்”
” அப்படியா. கேட்க ஆச்சரியமாக இருக்கே. இப்பவும் நீ எழுதுறியா.:
“ஓம் டீச்சர்”
“பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறாய்”?
“ வளர்பிறை“ டீச்கர்” அரிய்யா பதில் சொன்னா
“டீச்சர் அரிய்யா இப்பவே அந்த பெயரில் பத்து பக்கத்தில் கதைகள் . கவிதைகள் கட்டுரைகள் புத்தளத்தில் நடக்கும் அரசியல் இல்லாத முக்கிய செய்திகள் உள்ள வளர்பிறை யில் வருசத்துக்கு இருமுறை கையெழுத்துப் பத்திரிகையாய் வெளி வருகுது. பிரின்சிபலும், அரிய்யாவின் பேருவளை மாமாவும் அவளுக்கு பண உதவி செய்கிறார்கள் . ஒரு பத்திரிகையின் விலை இரண்டு ரூபாய்” பஹீஜா என்ற மாணவி சொன்னாள்.
. “உனக்கு எப்படி பஹீஜா இது தெரியும்:”
“ பிறை பத்திரிகைக்கு நான் படம் வரைந்து கொடுப்பேன்”
“உங்கள் முற்ச்சியைக் கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்குது. வேறு உதவி அரிய்யாவுக்கு உண்டா”?
“ அதிலாவும் பத்திரியாவும் எழுத்து பிழைபார்ப்பார்கள். அவர்கள் இருவருக்கும் அழகான கையெழுத்து உண்டும். அவர்களும் பத்திரிகை வெளிவர உதவுவார்கள்.
“ எவ்வளவு பிரதிகள் வெளியிடுவீர்கள்“?
’நூறு பிரதிகள் போட்டோ கொப்பி எடுப்போம் டீச்சர். புத்தளத்தில் உள்ள சாஜஹான் பிரஸ் எங்களுக்கு குறைந்த விலைக்கு போட்டோ கொப்பி எடுத்துத் தரும். காலபோக்கில் கொம்பியூட்ரை பாவித்து பத்திரிகையை வெளியிடுவோம் பிறை இந்தக் கல்லூரிக்குள் மட்டுமே கொடுக்கப் படும் எதுக்கும் பணம் தேவை டீச்சர் “அரிய்யா சொன்னாள்.
“ அப்படியா? . நான் ப்ரின்சிபாலோடு பேசிப் பார்க்கிறேன். அவர் கல்வி அமைச்சோடு பேசி கொம்பியூட்டர வாங்க தேவையன பண உதவி அமைச்சிடம் இருந்து பெறப் பாக்கிறேன். . எனக்கு உங்களின் பழைய இரு “பிறை” கையெழுத்துப் பத்திரிகைகளை என் பார்வைக்குத் தர முடியுமா? எப்படி இருக்கிறது உங்கள் பத்திரிகை என்று பார்த்து சொல்கிறேன்” நான் அவர்களுக்கு சொன்னேனேன் . அவர்களை இலக்கிய பயற்ச்சி கேட்டு பிரமித்துப்போனேன் .
“சரி டீச்சர் நாளை தருகிறோம்”. அரிய்யா சொன்னாள்
( யாவும் கற்பனை )
******

எழுதியவர் : பொன் குலேன்திரன் -கனடா (30-Oct-17, 8:48 am)
பார்வை : 187

மேலே