கம்யுனிஸ்டுகள் உலகில் இல்லை

வெண்பா
உன்திறமைக் காட்டி உழைத்திட வேண்டும்கேள்
உன்னால் குடம்மூன்று செய்தாலும் --- உன்குடும்பம்
பத்துநப ராயினும்தட் டாத்தருவர் சத்துரொட்டிப்
பத்தும் பகிர்ந்துமே தான்

உன்திறமைக் கேற்றக் கடுமுழைப் பென்றாலும்
உன்தேவை மட்டில்நீ றைவேறும் --- தண்டிக்கார்
உன்னுழைப்பு சொற்பமாயின் அன்றில் கொடுப்பாராம்
உன்தேவைக் கேற்பவேவென் றார்

இதுனது என்றும் அதுயென தென்றும்
எதுவும் கிடையாப்போ மிங்கு --- எதுவும்
உரிமையற்ற தாகிச் சரிசமமாம் என்று
பரிதவிப்பர் செல்வந்த ரும்

மாடாய் உழைப்பினும் ஈட்டியநின் மாடெல்லாம்
மாடாகா சித்தாந்தம் பாரிதை --- மாதா
மடியில் துடித்தவள் மார்பிலேப் பாலைக்
குடிக்கும் குழந்தைமட்டில் சொத்து


ஆசிரியப்பா
உலகில் கிடையா உண்மைக் கம்யூனிஸ்ட்
உலகில் கம்யூ னிஸ்ட்பத் துமூன்றாம்
அலகிலே இருந்தும் இல்லை கொள்கையில்
பலர்பின் பற்றா விட்டார்
பலதில் சைனா தேசம் சேர்த்தே

கம்யுனிஸ்டுகள் பலரும் சொத்து வைத்திருக்கிறார்கள் அவர்கள் பேரிலே வங்கியில் பேலன்ஸ் உள்ளது, தொழிற்ச்சாலைகள் உள்ளது. ஆகவே உண்மையான கம்யுனிஸ்டுகள் உலகில் கிடையாதாம்


---ராஜ பழம் நீ (30-oct-2017)

எழுதியவர் : பழனி ராஜன் (30-Oct-17, 10:15 am)
பார்வை : 228

மேலே