ஒற்றைப் பார்வையாலே

ஓர் ஒற்றைப் பார்வையாலே
என் நெஞ்சில் நிலையாக நுழைந்தவளே
குயில் பாடும் உன் கொச்சை மொழி
இன்னும் என் செவிகளில் தேனாய் ஒலிக்கிறது
வாய் திறந்து சிரித்தாய் அன்று இதழ் பிரித்தாய்
நீ சென்ற தடமெங்கும் சிந்திய ரோஜா சிதறல்கள்
இன்னும் என் கண் முன்னே மலர் வட்டமாய்
இன்று ஏன் தாமதம்
நீ வரும் திசைஎல்லாம் என் கண்கள்
உன்னைத் தேடுகின்றனவே
ஏகாந்த இரவுகளில் நிலா வானில் உலா போகும்
என் நெஞ்சில் உலாவரும் உன் நிலா முகம்
என் நித்திரையை நிலையாய்க் கெடுப்பவளே
எனக்கு தாயும் ஆனவளே வாழ்வில் யாவும் ஆனவளே
என்புக் கவசத்தால் ஆன என் இதய வீட்டில்
உன்னைச் சிலையாக சிறை வைத்திருக்கிறேனடி
உடைத்து உள் சென்று யாரும் உன்னைக் கவராத படி
ஆக்கம்
அஷ்ரப் அலி