காதல் கீதம் இசைக்கிறேன் என் இராதைக்காக

அன்புக்கு அரணானாய்...
பண்புக்கு பனியானாய்...
பாசமகளே! வேஷங்கள் இல்லையடி உன்னிடம்...
பண்பையும், அன்பையும் அளிக்க வேண்டுகிறேன் உன்னிடம்...

சனனம் தொடங்கி மரணம் நெருங்க கனநேரமும் உன் நினைவே பொங்கி வர தேடுகிறேன் உன்னை...
ஆன்ம பந்தம் கொண்ட அன்பானவளே! நீ எங்கே இருக்கிறேன்??

தூதாய் தேன் தமிழை அனுப்பி வைக்கிறேன் காற்றிலே...
கட்டித்தங்கமே! எங்கிருந்தாலும் வந்துவிடு...
செய்தி தந்துவிடு...

உன்னைக் காணாது இப்பிறவி வீணில் கழிய, கண்களிரண்டும் உன்னைத் தேடும் பணி கொண்டேன்...
அகக் கண்களிரண்டும் உன்னைத் தேடும் பணி கொண்டேன்...

எண்ணற்ற பணிகளுக்கு மத்தியில் ஆழ்மனதின் ஆத்ம தேடல் நீயடி...
பனிமலைக்குள் உறைந்தாலும் எரிமலையாய் குமுறும் நெஞ்சம் அடிக்கடி இப்படி வார்த்தைகளை உளறி நீயில்லா துக்கத்தைக் கொப்பளிக்கிறதடி...

தடுமாறாத சிந்தனையில் உன்னைக்காண தடமாறாத வழியில் நானும் வாழ்க்கை வாழ,
கண்டதும் என்னை கண்டுகொள்வாயோ?
யாரோ என்று மறந்து செல்வாயோ??

நிலையில்லா கலியுக வாழ்விலே ஆன்ம பந்தமே! நீயே என் சொந்தம்...
தேடி வா... நாடி வா...
தேடலும், நாடலும் ஒன்றுபட இயற்றி வைப்போம் புதியதோர் வாழ்வியல் இலக்கணம்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Oct-17, 2:44 pm)
பார்வை : 500

மேலே