காதல்
காதல்
காலம் கொண்ட காதலடி-இது
அழவும் தெரியாது ஆளவும் தெரியாது .......
விழிகொண்ட பார்வையிலே மருகிடும்
மனம் நொறுங்கிடும் வேளையிலும் ..............
தூரம் நின்று உன் முகம் கண்டாலும்
கைகோர்த்து நடந்ததாய் ஆயிரம் கற்பனைகள் .......
முகம் பார்த்து பேசாத போதும்
ஆயிரம் உரையாடல் என்னுள்ளே -உன் விழி பார்த்து .........
ஏதோ ஒரு நம்பிக்கையில்
என் நாட்களும் நகர்கிறது .........
மாற்றமாய் உன் கரம் பிடிப்பேன் என்று
ஏக்கம் வந்து எடுத்துரைப்பதால் - என் உயிர் காதலியே ...........