சொல்லிவிடு

கொல்லும் உன் நினைவுகளிடம் சொல்லிவிடு
இங்கு இருப்பது வெறும் கூடு என்று...

உன் பின் நடக்கும் என் பாதங்களிடம் சொல்லிவிடு
என்னை விட்டு நீ சென்றுவிட்ட தூரம் அதிகம் என்று....

உன் முடிவை மறுக்கும் என் மனதிடம் சொல்லிவிடு
மறு பரிசீலனைக்கு இடம் இல்லை என்று...

உன்னை மட்டும் கனவில் காணும் என் கண்களிடம் சொல்லிவிடு
வலிகள் மட்டும் நீ தரும் பதில் என்று....

உன்னிடம் மண்டியிடும் என் வார்த்தைகளிடம் சொல்லிவிடு
அவை உன் செவிகளை எட்டுவதில்லை என்று...

நீ மட்டும் வரும் என் கனவுகளிடம் சொல்லிவிடு
கனவுகளும் கற்பனை மட்டும் தான் என்று...

ஏங்கும் என் எண்ணங்களிடம் சொல்லிவிடு
என்றும் நீ என்னை எண்ணவில்லை என்று...

எங்கும் உன்னை மட்டும் காணும் என் கண்களிடம் சொல்லிவிடு
இனி நேரில் ஒருமுறை கூட பார்க்க போவதில்லை என்று...

உன்னை மறக்க மறுக்கும் என்னிடம் ஒரு முறை சொல்லிவிடு
நீ என்னை மறந்துவிட்டாய் என்று...

எழுதியவர் : நான் (30-Oct-17, 1:19 pm)
சேர்த்தது : Kavitha
Tanglish : sollividu
பார்வை : 280

மேலே