என்னவள்

சித்திரம்போல் என் எதிரே
வந்து நின்றாய் என்னவளே
நீ சித்திரமல்ல என்பதை
உன்னை தொட்டபின்தான் உணர்ந்தேன்
என் அழகே, எழிலே என்னவளே
உன் எழிலாம் தூண்டில் கொண்டு
என்னை ஓர் மீனாய் உன் வசம் இழுத்துக்கொண்டாய்
உன் வலையில் நான் !

என்னையே மறந்தேன்
உலகையும் மறந்தேன் -பார்க்கும்
இடமெல்லாம் நீயே ஆயினபின்
நீதானே என் உலகும் ஆனாய்
நீ பரிதி ஆனாய் , நான் உன்னை
சுற்றி சுற்றி வலம் வரும்
கோள் ஆனேன் பூமியாய் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Oct-17, 11:57 am)
Tanglish : ennaval
பார்வை : 330

மேலே