அப்பா
அப்பா......
உன் கைவிரல் பிடித்து,
கவலை ஏதுமின்றி
வீதியைச் சுற்றி வந்த
அந்த நாட்கள் வேண்டும்!!!
உன் மிதிவண்டி முன்கூடையில்
என்னை அமர வைத்து
ஊரையேச் சுற்றி காண்பித்தாயே...
அந்த நிமிடங்கள் வேண்டும்!!!
உன் தோளில் என்னைச் சுமந்து
உன்னைத் தாழ்த்தி,
என்னை உயர்த்தி
உலகத்தைக் காட்டினாயே
அந்த நொடி வேண்டும்!!!!
உன் சரிபாதி ,
என்னைச் சிறுவார்த்தை
சொன்னாலும்,அவள்மேல்
கோபம் கொள்வாயே
அந்த பொழுது வேண்டும்!!!!
உன் குழந்தைச் சிரிப்பினில்
என் உலகை மறந்தேனடா
என் அருமை மகளே.....
என்று நீ கூறும்போது,
உன் காலடியில் இறந்து
மீண்டும் உன் குழந்தையாக
பிறக்க தோன்றுகிறது...!!!
நான் மணம் முடித்து
உன்னைப்
பிரிந்துச்செல்லும் நொடியில்
என் மனதை உன்னிடமே
விட்டுச்செல்வேன்......
ஏனெனில்,
யாராலும் ; தாயாலும்
உணர முடியாத என் மனதை
நீ உணர்ந்தாயே என் தந்தையே...
உன்னை என்றும் ,
பிரியா வரம் வேண்டும்!!!!
மகளாக பிறந்தாலும்
மனதாற உன்னைப் பிரியமாட்டேன்
I LOVE YOU APPA.......