மழை வந்தது
வருடங்கள் இரண்டு கழிந்த பின்னும்
மழைக்காணா மருதமும் பாலையானது
நம்பிக்கை முற்றும் இழந்த குடியானவன்
ஓலை வீட்டு வாசலில் வயிறும் கன்னமும்
ஒட்டிப்போக தாகத்தால் அம்மா என்று
இரையும் ஆடு மாடு சூழ வானத்தையே
வெறிச்சோன்னு பார்த்து இருக்க -எங்கிருந்தோ
காய்க்கும் வெய்யலை தோற்கடிப்பது போல்
சில்லென்று காற்று வீச வானம் கருக்க
மேக்கப்போர்வை வந்து மூட - முதலில்
'டொக்', 'டொக்' என்று நீர்த்துளிகள் வந்து
குடியானவன் லோட் வீட்டில் வீழ்ந்து
அதில் ஓட்டை இருப்பதைக் காட்ட
குழிவிழுந்த ஒட்டிய அவன் கன்னத்திலும்
அமுதம்போல் வந்து சொட்ட.............
இதோ , தூறல் போய், பெரு மழை ஆனது
இப்போதும் ஆவினங்கள் அம்மா என்று இறைந்தன
அதில் அவலம் இல்லை, பீதி இல்லை மாறாக
ஓர் ஆனந்தம் ஒலித்தது............................
குடியானவன், தன் மக்களோடு ,ஆவினங்களோடு
கொட்டும் மழையிலும் ஆனந்த கூத்தாடு ஆடுகிறான்
மருதம் மீண்ட சந்தோஷத்தில் அவன் தன்னை
மறக்கிறான்.....துன்பங்கள் எல்லாம் மறந்து ....
ஆடுகிறான் மகிழ்ச்சி பொங்க...................
கை தூக்கி வானைக் கும்பிடுகிறான் ..................
மழை, மழை, மழை..................................
வறண்டமண் மீண்டும் மருதம் ஆனது......
இருந்த அவன் மனதில் மீண்டும் ஒளி புகுந்தது
மழைத்தந்த ஒளியாய் ...................................... .