நான் நல்லா இருக்கேன்

பல வருடங்கள் கோமாவில் இருந்து இன்று கண்முழித்து எழுந்தவரின் பாட்டு... (ஒரு கற்பனை)
நான் நல்லா இருக்கேன் மக்கா
ஏன்டா இப்படி ஆனீங்க..
மொத்தமா வீணா போனீங்க...
நான் கெத்தா இருக்கேன் மக்கா
நீங்க நோயில விழுந்தீங்க..
நாட்டையும் நொண்ட வச்சீங்க... ( நான் நல்லா இருக்கேன்..)
மொபைலு மோகம் செல்பி மோகம்
என்னங்கடா இதெல்லாம்
பேஸ்புக் மோகம் வாட்ஸ்அப் மோகம்
எப்படிடா இதெல்லாம்
வானொலி செய்தி என்னாச்சு
ஒளியும் ஒலியும் என்னாச்சு
பொங்கல் விளையாட்டு என்னாச்சு
அட வாடிவாசல் என்னாச்சு
தலைவர் எங்கடா தலைவி எங்கடா
ஐநூறு ஆயிரம் எங்கடா
விவசாயி தற்கொலை மழையே பெய்யல
சாதீயப் படுகொலை என்னடா
இத்தன பள்ளிக் கல்லூரி எல்லாம்
எப்படி முளைச்சு வந்தது
அரசாங்க பள்ளி நான் படிச்சது
எங்கடா புதைந்து போனது (நான் நல்லா இருக்கேன்..)
பர்கரு பீசா கேஎப்சி டாமினோஸ்
என்னங்கடா இதெல்லாம்
மணலெல்லாம் சுரண்டி பணமா மாத்தினா
தண்ணியெங்கடா தங்கும்
மாட்டு வண்டி என்னாச்சு
வாடகை சைக்கிள் என்னாச்சு
பொங்கல் வாழ்த்து என்னாச்சு
அட வாய்க்காவரப்பு என்னாச்சு
எங்கெங்கு காணினும் ஆஸ்பத்திரி மயமே
என்னங்கடா இதெல்லாம்
சர்க்கரை நோயின்னு புதுசா ஒன்னா
எப்படிடா இதெல்லாம்
ஆச்சி சிவாஜி எங்கடா
இன்னிசைப் பாடல்கள் எங்கடா
கிராமியப் பாடல்கள் எங்கடா
அட கானாபாட்டு எங்கடா (நான் நல்லா இருக்கேன்..)
ஆட்டுக்கல் அம்மிக்கல் கயித்துக் கட்டுலு
எங்கடா போயிருச்சி
பாவாடதாவணி எங்கடா நைட்டீனு ஒருடிரஸா
நாடேஇப்படி ஆயிருச்சு
லஞ்சம் இன்னும் அழியலையா
தீவிரவாதம் தீர்ந்து ஒழியலையா
பொய்யும் புரட்டும் உச்சமா
அடவறட்சி மட்டுமே மிச்சமா
நேர்மை எங்கடா நியாயம் எங்கடா
சேமிப்பு இப்ப எங்கடா
கடிதம் எங்கடா தந்தி எங்கடா
டிவி ஆண்டெனா எங்கடா
பறவை இனமே கண்ணுல படல
எங்கடா துரத்தி விட்டீங்க
இது நாடா இல்லா பெருங்காடா
நான் கோமாவுக்கே போறேன்டா.. (நான் நல்லா இருக்கேன்)