தமிழா என் தமிழா

வீரம் வளர்த்த மண்ணில் பிறந்த தமிழா..
ஈரம் ரொம்ப நெஞ்சில் கொண்ட தமிழா..

உரிமை எல்லாம் ஏனோ விட்டுக் கொடுத்தாய்
உயிரை மாய்க்கும் வரைக்கும் அமைதி காத்தாய்

ஒற்றுமை என்று ஒன்று உனக்கு தெரியுமா
அந்த ஆயுதம் நம்மிடமில்லை என்பது புரியுமா

சேர்ந்து நிற்க இமயமலையும் சின்னக் குன்றுதான்
எதிர்த்து நின்றால் ஆயிரம்சிங்கம் நமக்கும் அஞ்சும்தான்

தமிழா தமிழா போராடு உரிமை கிடைக்கும்வரை
தமிழா தமிழா வாதாடு லட்சியம் எட்டும்வரை...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 8:43 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : thamila en thamila
பார்வை : 142

மேலே