தமிழ் மண் மணப்பது மொழிப்பற்றில்
மொழிப்பற்றில் தமிழருக்கு இணை எவருமில்லை
தமிழ் இன்றும் செழுமையாய் இருக்க
தலைமுறை தலைமுறையாய் தொடரும்
மொழிப்பற்றே காரணம்...
இன்று உலகம் எவ்வளவு முன்னேறினாலும்
அதற்கு தகுந்தபடி தமிழ் தன்னை
மெருகேற்றிக்கொண்டே இருக்கிறது
தன்னை அதற்கேற்றவாரு வடிவமைத்துக் கொள்கிறது
இன்றும் என்றும் பொங்கி எழும்
தமிழ் கவிதைகள் பாடல்கள் அனைத்தும்
தமிழரின் மொழிப்பற்றை பறை சாற்றுகின்றன
தமிழ் மண் மணப்பதை சத்தமாய் உரைக்கின்றன..
மேலும் மேலும் தமிழ் வளரவேண்டும்
தமிழர்கள் மறக்காமல் வளர்க்க வேண்டும்
வருங்கால தலைமுறை தமிழால் சிறக்கவேண்டும்
உலகம் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும்