கற்பனையின் சிறப்பு

கற்பனையின் கருவாய்
பிறப்பு
கற்பனையின் உருவாய்
வளர்ப்பு
கற்பனையின் தொடராய்
வழிநடப்பு
கற்பனையின் வரவாய்
எதிர்பார்ப்பு
கற்பனையின் பதிவாய்
சரிபார்ப்பு
கற்பனையின் கரைசலாய்
கையிருப்பு
கற்பனையின் இறுதியாய்
காத்திருப்பு
கற்பனையின் ஊடே முடிவாய்
முடிந்து போவதே
இதன் சிறப்பு!
N.Sekar