ஏய் கடவுளே பார்த்தாயா
கச்சத்தீவைத் தொடுவார்
தமிழ்நாட்டோடு இணைந்து விடும்
காவிரியைத் தொடுவார்
நாளையே வந்து விடும்
அணு உலையைத் தொடுவார்
இந்தியா கழற்றி
ரஷ்யாவிற்கே கொடுத்து விடும்
மீத்தேன் வயலைத் தொடுவார்
மீத்தேன் திட்டம் முழுமையாக
கைவிட்ட சத்தியப்பத்திரத்தை
இந்தியா வழங்கி விடும்
நியூட்ரினோ திட்டத்தைத் தொடுவார்
திட்டமும் முழுதாய் ரத்தாகிவிடும்
விவசாயிகளைத் தொடுவார்
கடன் பிரச்சினை விட்டொழியும்
GST யும் NEET ம் புதிய
திருப்பத்துடன் திரும்பும்
தமிழைத் தொடுவார்
இலக்கணத்துடன் எழும்பும்
ஏய்..! கடவுளே பார்த்தாயா
இப்போதெல்லாம்
நடிகர் தொட்டாலே
பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றன
சமூகத்தின் வாழ்த்து - இனி
உனக்கில்லை இல்லை
சமூகசேவகர் கமலுக்குத்தான்..!