நம்பிக்கை

அற்று விழும் இலை கூட‌
மக்கும் எண்ணம் கொள்ளாது
சிறிதாய் காற்று பட்டால் கூட‌
மேலெழும்பி கிளம்பி விடும்

கொஞ்சமே வாழும் எறும்பும் கூட‌
வாழும் வரைக்கும் உழைத்திருக்கும்
நிமிடத்தில் மறையும் வானவில் கூட‌
இருக்கும் வரைக்கும் சிரித்திருக்கும்

மனிதனெனவே பிறவி எடுத்து விட்டோம்
சோம்பலாய் கிடத்தல் தப்பில்லையா
இனியவை நமதென நினைத்துக் கொண்டு
வீரமாய் வாழ்வதே துணிவில்லையா

உயரம் செல்வோர் அத்தனை பேரும்
நம்பிக்கை விதைத்தவர்கள் அல்லவா
லட்சியம் நோக்கிய பயணத்தில் ஜெயித்து
சிகரத்தை தோட்டவர் அவரில்லையா

நிச்சயம் நம்பிக்கை மனதில் வைக்க‌
நல்ல வெற்றியை பெற்றிடலாம்
சூட்சுமம் இதிலே ஏதும் இல்லை
லட்சியப் பாத்திரம் நாமாவோம்

நினைத்ததும் ஜெயித்தவர் எவரும் இல்லை
நம்பிக்கை வைத்திட்டால் தோல்வி இல்லை
முடிவெனில் ஆரம்பம் அருகில் உண்டு
முடிவெடு ஜெயித்திட நம்பிக்கை கொண்டு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 4:18 pm)
Tanglish : nambikkai
பார்வை : 871

மேலே