உன்னை கண்ட அந்த நொடி

நம்மை திருமண பந்தத்தில்
இணைத்திட
நம் குடும்பத்தார்
நிச்சயித்த பின்னர்..
அதுவரையில்
உன்னை சில முறை கண்டதுண்டு
ஆனால் உன் முகம் ஏறெடுத்து கண்டதில்லை..
நீ தான் என் வாழ்க்கை என
முடிவு செய்த நொடி
உன் வரவுக்காக காத்திருந்த நொடி
அப்பப்பா பெரிய பிரளயம் தான் என்னுள் எனலாம்..
அலைபேசியில் உன் குரல்
கேட்கும் போதெல்லாம்
உன் வருகையை எண்ணி
பூரிக்கும் உள்ளத்தை
என்னவென்று சொல்வேன்...
நீ வருகிறேன் என்று
சொன்ன நாள்
எப்போது வரும் என்று தவித்த
ஒவ்வொரு நொடியும்
நம் காதலுக்கே வெளிச்சம்..
மழையின் வருகைக்காக
காத்திருந்த கார்மேகங்களின் நிலைதான் எனக்கும்..
நீயும் வந்தாய்..
ஆழிப்பேரலையாய் பொங்கிய உள்ளம்
உன்னை கண்ட அந்த நொடி
உறைந்துப் போனது..
மௌனம் கலைத்தாய்..
காதலிக்கிறேன் என்றாய்..
நெஞ்சோடு அணைத்து
உச்சி முகர்ந்தாய்
நானோ புதிதாய்
பிறந்ததை உணர்ந்து
உன் கைகளில் குழந்தையானேன்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (2-Nov-17, 7:44 am)
பார்வை : 464

மேலே