மழை மனிதன்

மழை மனிதன்
துருவப் பகுதிகளில் பனிமனிதன் உரு செய்து
மகிழ்ந்திருக்கும் வேளையிலே !!
பாரத நாட்டின் பருவ மழைக்காலம் இதில்
பட்டிதொட்டி துவங்கி பார் போற்றும் பட்டினம் வரை
பாதைகளில் மிரட்டலுடன்
பள்ளங்களில் படுக்கை விரித்து
மழை மனிதன் உறங்குகிறான் !!