தனிமை என்பது

[] தனிமை என்பது ... - யாழ் ..
---------------------------------------------


புரிந்து கொள்ளவில்லையா
இல்லை மிகச்சரியாக
புரிந்து கொண்டுவிட்டார்களா
என்னை -

புரிந்து கொள்ளவில்லையா
இல்லை சரியாக
புரிந்து கொண்டுவிட்டேனா
உலகை -

இல்லை என்னை நானே
புரிந்து கொள்வதற்கு
வாய்ப்பளிக்கிறதா இந்த தனிமை ..!

தனிமை என்பது
முற்பகல் விதைத்ததின்
இப்பகல் விளைச்சலா !
பிற்பகல் விளைந்திட
இப்பகல் விதைப்பதா ..!

தனிமை - வருத்தி கொல்லுமா !
இல்லை திருத்தி செல்லுமா ..!

தனிமை ஆனது
பாவங்கள் தாக்கிடவா !
பாவங்கள் போக்கிடவா ..!

பயன்படுத்தி கொள்ளாத வரை
தனிமை என்பது தண்டனை !
பயன்படுத்தும் பட்சத்தில்
தனிமை என்பது இனிமை ..!

எழுதியவர் : (3-Nov-17, 7:47 pm)
Tanglish : thanimai enbathu
பார்வை : 142

மேலே