பிடிக்கும் உன்னை

பாவாடை தாவணி
பிடிக்கும்!
உன் பாதம் தாங்கும்
காலணி பிடிக்கும்!

நீ மாமா என்று
அழைப்பது பிடிக்கும்!
என் மடி சாய்ந்து
உறங்குவது பிடிக்கும்!

நீ சாப்பாடு கொடுத்த
அழகு பிடிக்கும்!
சாப்பிட்டுக் கொடுத்த
ஐஸ்க்ரீம் பிடிக்கும்!

நீ முதலில் தந்த
முத்தம் பிடிக்கும்!
உன் வளையல் போடும்
சத்தம் பிடிக்கும்!

உன்னை சந்தித்த
இனிப்பகம் பிடிக்கும்!
என்னை சிறையிட்ட
உன் இதயம் பிடிக்கும்!

நீ ஊட்டிவிட்ட
உணவு பிடிக்கும்!
உன் நினைவுகளோடு
உறங்க பிடிக்கும்!

நீ அடிக்கடி காட்டும்
வெட்கம் பிடிக்கும்!
உன் அணைப்பினில்
வரும் வெப்பம் பிடிக்கும்!

நீ பேசும்
வார்த்தைகள் பிடிக்கும்!
உன்னுடன் வாழ்ந்தால்
வாழ்க்கையும் பிடிக்கும்!

உன்னோடு என்றும்
இருக்கப் பிடிக்கும்!
உன் மடிசாய்ந்து
இறக்கவும் பிடிக்கும்!!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (5-Nov-17, 4:15 pm)
Tanglish : pidikum unnai
பார்வை : 579

மேலே