கடவுள் இருக்கிறார்
கடவுள் என்பது ஆணுமல்ல பெண்ணுமல்ல கண்ணுக்குப் புலப்படா புனிதமது. இதனைக் கண்டுகொள்ள முறையாக முயற்ச்சி செய்தவர்கள் கண்டுள்ளார்கள். காணாதவர்கள் விடாமல் முயற்ச்சி செய்கிறார்கள். சிலர் அதைப்பற்றி எந்த முயற்சியும் செய்யாது கடவுள்
இல்லையென்று முட்டாள் தனமாக மூர்கமாய்
பேசி சிரித்து வருகிறார்கள். நம்நாட்டில் பதினெண் சித்துக்களும் அயல்நாட்டில் நபிகளும் கடவுளிடம் பேசியும்
சம்பாஷணை செய்தும் இருக்கிறார்கள். அதைக்காண்பதெப்படி என்று சித்துக்கள் நூற்றுக்கணக்கான சுவடிகளில் குறித்துப்பேசி இருக்கிறார்கள், அதற்குப்பெருமுயற்சித்தேவை.அதுமிகக்கடினம் ஆகையால் கடவுள் இல்லை என்றுசொல்லி எல்லோரையும் சிரிக்கவைத்து பேசிமக்களைக் கவர்வதுமேல் எனப் பெரியார்முதல் நடிகன் கமல்ஹாசன்வரை முயன்று வருகிறார்கள். இதில் ஒரு விஷேசம் எந்த மதத்தில் கடவுளைக்காண வழி வகுத்திருக்கிறதோ அந்த இந்து மதத்தை தாக்குவதுதான் வேடிக்கை. மற்ற மதத்தினரிடம் செல்ல அவர்கள் பயந்து பேடியாகி விடுகிறார்கள். ஆக கடவுள் இருக்கிறார் அதைக்கண்டுபிடி.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
