பெண்மை

உலகை நேர்வகுக்க உன் உச்சி வகுடு...
குறுக்கே வகிடெடுக்கும் ஆணின் கர்வத்தை அடக்குதடி

பால் சங்கடையை படுகிடையாய் வைத்த விழிகள்
ஊற்றிய பால் உறைந்து விட்டதென தோன்றும் வெண்மை
ஊர் கண் படாமிலிருக்க மையத்தில் மை பொட்டின் அழகு
வானவில்லிடம் கூட இல்லாத வண்ண கலவை பெண் சிலையே

அச்சம் இல்லா பார்வை ... உடன் உன் உச்சி இமை தூக்க....
கைப்பிடி இல்லா வெட்டும் அறிவாலோ என்ற
ஆடவர்களின் அச்சம் அசைக்க முடியா துணிச்சலாடி உன் பென்னமைக்கு


கன்னங்களை உரசும் கம்மல் உன் நாசி துவாரம் வழியே சுவாசம் கொள்ளும் மூக்குத்தி
கழுத்தில் வழியும் வியர்வையை அமிர்தமென பருகும் அணிகலன்
கைக்குள் வாழும் வலைவி . நீ ஆசிர்வதிக்க காலில் விழும் கொலுசு இப்படி உனக்காய்
அழகு சேர்க்கும் அணிகலன்கள் எல்லாம் தேவைப்பட்டால் உயிரை காக்கும்
ஆயுத படைகளின் அணிவகுப்பா பெண் சேனையே!!!

சிரிக்கும் சிலை சினம் காட்டாது சினம் கொண்ட சிலை சிரிக்காது
சாத்தியங்கள் உன்னில் உளிபடா
பெண் சிலையே

நீ சிரிப்போடு நடமாட சூரியனும் நிழற்குடை தரும்
நீ கோபத்தோடு நடமாட விண்மீன்களும் வெப்பம் தரும்

தேவைப்பட்டால் உயிர்களை உருவாக்கும் பெண்மையின் ஊற்று
கோவப்பட்ட்டால் மதுரையை போல் உலகையே எரிக்கும் பெண்மையின் தூற்று

எழுதியவர் : ராஜேஷ் (6-Nov-17, 11:37 pm)
Tanglish : penmai
பார்வை : 165

மேலே