காட்சி வரம்
நெடுநாள் புரிந்த தவத்தை மெச்சி
இறைவன் காட்சி தந்தான்
நேரடி வரம் வேண்டாம்
ஆசைகள் அடைய வழி சொல் போதும் - என்ற நிபந்தனையில்...
புகழ் வேண்டும் என்றேன்.,
பிறர்முகம் முன்
சங்கீர்த்தனம் பாடென்றான்:
புகழ் வேண்டாம்
புகழில்லா கவிஞனாகிட
போதுமென்றேன்.,
காசு - கஞ்சியின்றி
வாழ்ந்திடு என்றான்:
மதிப்பு மரியாதை
கிடைக்காதே என்றேன்.,
யாசித்தல் நிறுத்திடு என்றான்
நிறுத்தி விட்டேன் என்றேன்..,
'நான் வருகிறேன்' - என சொல்லி
மறைந்து போய்விட்டான்
வரம்கொண்டு வந்த என் இறைவன்
வரம் கொடுக்காமல் போனாலும் -அவன்
காட்சி கிடைத்துவிட்டது
காட்சியே வரமாகிப்போனது