உன் முகம் பார்த்த முதல் நாள்
இனியவளே....
உன் முகம் பார்த்த
முதல் நாள் எனக்கு
நன்றாக நினைவில் நிற்கிறது.
இப்புவியில் உனது
காதல் பார்வையைக்
கண்டு ரசித்த முதல் மனிதன்
நான் என்ற நம்பிக்கையில்
இக்கவிதை வரிகளை எழுதுகின்றேன்………..
உன் மருண்டு நிற்கும்
மான் விழிகளில்………..
திரண்டு நிற்பது ஏனித்தனை
நீரின் துளிகள்?
எண்ணெய் ஊற்றி
பெண்ணை எரிக்கும்.........
நிலைக்கண்டா?
இல்லை………………………..
உன்னால் ஏமாறப்போகும்
என் காதலைக் கண்டா?
சொல்லடி என்
செல்லக்கிளியே?