நான் இருப்பேன் உனக்காக
எந்தவொரு வார்த்தையும் உனக்கு சொல்லாது என் காதலை...
எந்தவொரு நடவடிக்கையும் உனக்கு உணர்த்தாது நான் உன் மீது கொண்ட காதலை...
உன்னுடனேயே என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது ஒரு முறை..
நீ என் அறிவு சுரங்கத்தில் ஒளி...
நீ என் மாசில்லா தங்கம்...
நம்பிக்கை இழந்துவிட்டால் நீ என்னைப் பற்றிக் கொள்வாய்...
நீ என் வாழ்நாள் முழுவதும் தேர்வுகளில்லா விடையானாய்.
என் வாழ்க்கையை தோல்வியின் நிழலில் முடிக்க,
நீல நிற வானமாய் கண்டேன் உன் அன்பு மனம்...
என்னால் எதுவும் கூறமுடியாது,
என்னால் எதுவும் செய்யமுடியாது, உனக்காக என் இதயத்தில் எவ்வளவு அன்பு இருக்கிறது என்று உனக்கு தெரியப்படுத்த...
ஆனால், ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என் ஆழ்மனதில் இருந்து...
நான் எப்போதும் உனக்காகவே இருக்கிறேன்...
இருப்பேன்...