வெளிச்சத்தின் நிழல்கள்

வெளிச்சத்தின் நிழல்கள்
கட்டு கட்டாய் பணத்தை
எண்ணுபவன் சட்டைப்பையில்
அன்றை செலவுக்கு பத்து
ரூபாய் மட்டும்
சில்லறைகளுடன் நடத்துநர்
குடித்து விட்டு தேநீருக்கு
கடன் சொல்கிறார்
நாள் முழுக்க சாராயக்கடையில்
ஊற்றி கொடுப்பவன் தெளிவுடன்
எப்பொழுதும் !
ஐந்து நட்சத்திர விடுதியிலும்
வாங்கி உண்ணமுடியும் என்பவனுக்கு
பத்திய உணவு மட்டும் !
நவ நாகரிக உடைகள்
தைப்பதற்கு கிழிசல் ஆடையுடன்
தையல்காரர்கள் !
வெளிச்சத்தை கண்டு மயங்கி
விடுவதால் நிழல்கள் நம்
கண்களுக்கு தெரிவதில்லை !