நட்பு

நல்லவைப் பார்த்து
நல்லதைக் கேட்டு
நல்லவையே பேசி
நல்லதையே செய்ய
பழக்கப் படுத்திக்கொள்ள
நல்லவையெல்லாம் தாமாக
வந்தடையும் -நல்லோர்
சேர்க்கையும் தானாக
உன்னை நாடி வரும்
அது தந்திடும் அவர் நட்பு
அந்த நட்பொன்றே இம்மை
மறுமைக்கும் அருமருந்து
இன்னும் என்ன வேண்டும்
இம்மையில் வாழ்க்கைக்கு
இனிதாய் வாழ்வதற்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Nov-17, 9:26 am)
Tanglish : natpu
பார்வை : 352

மேலே