குட்டி டீச்சர்

வரவேற்பறையை வகுப்பறையாக்கி
குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி
பாடமெடுக்கிறாள் என் குட்டி டீச்சர்.

பிராய கால வகுப்பறையின்
பின் பெஞ்சிலமர்ந்து
பணிவாகத்தான் முதலில்
பாடம் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இடையில் ஏனோ
மடியிலள்ளி முத்திட்டு
கொஞ்சித் தீர்த்துவிட்டேன்
குட்டி டீச்சரை.

ஆட்ட விதிகளை மீறியதற்காக
இப்போது குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன்
நான் குட்டி டீச்சரிடம்.

எழுதியவர் : (10-Nov-17, 11:48 am)
Tanglish : kutti teacher
பார்வை : 6097

மேலே