பிரிவு

என் வாழ்க்கை சாலையில் கனலாய் அவள் செல்ல நதியென நம்பி நீந்தி திரிய ஒரு மீனாய் ஆசை பட்டேன் கொக்கென என்னை கொத்தி விழுங்குவாள் என சிந்தை அறியேன் .

அறியாமல் உள்ளம் யாசித்து விட்டது அவள் அன்பை

மாயையாய் அவள் செய்த அன்பு என்னை சூறையாடி சென்று விட்டது
போதும் பெண்ணே உன் செய்கை இது மாயை என உணர்ந்தேன் .

மீண்டும் காதல் கொள்ள மாட்டான் உள்ளமது கண்ணீரின் ஊற்றில் வெள்ளமாக மாறி விட்டது

இனி ஓடம் என் கண்ணில் ஓடும் எந்நாளும் .
அவள் நினைவை மட்டும் சுமந்து மிதக்க வாடும் என் உள்ளம் எந்நாளும்

காதல் தோல்விகள் இயல்புதான் மறுக்கவில்லை
அது எனக்கான போது ஏற்றுக்கொள்ள மனமில்லை

ஒரு போதும் கைவிடேன் என உரைத்தால் மாது ஒரு நாள் பார்த்து இன்றையோடு போதும் உன்கரம் விலக்கிடு என வெறுத்தால் உரைத்தால் என்னை புதைத்தாள்

நான் என் செய்ய கண்கள் பிழியும் கண்ணீரும்
உள்ளங்கையில் தேங்கி அவள் பெயர் சொல்லி அழுகிறது
ஆறுதலுக்கு வார்த்தை நான் என்ன சொல்ல கண்ணீரிடம் அழுவதே நானாக இருக்கும் பொழுது

சிந்தனை மறக்காத ஒரு செய்கை அவள் பிரிவு என்னுள்ளே எந்நாளும் மிதக்கும் அவள் நினைவு

மறக்கும் பாதை இல்லை ஆவலுடன் நான் சென்றது .
என்னை மயக்கும் போதைகள் அவள் தந்த ஆசைகள்

எழுதியவர் : ராஜேஷ் (10-Nov-17, 5:10 pm)
Tanglish : pirivu
பார்வை : 156

மேலே