ஞாபகம்

கடந்துவந்த பாதையின்
கடைசி நிமிடம் வரை
மூளையும் மனதும்
சேர்ந்து சொல்லும்
வார்த்தைகள்தான் ஞாபகம்
சில திறமைகளின்
மூலதனமாகவும்,
தொலைத்தவரின்
உச்சரிப்பாகவும் இருப்பது ஞாபகம்
பல நேரம்
ஆசையாய் கேட்டும்,
சில நேரம்,
வேண்டாமென வெறுப்பதும்,
இந்த ஞாபகம்.