சாத்தானாகிட வேண்டும்

கல்நெஞ்சம் கொடு – என்னுள்
கருணையுள்ளம் எடு

விதி ஆனையிட்டதினாலே
விடியாப்பொழுதாய் இருந்திடாதே

விடியல் வேண்டும் – பல
விதிகள் மீறவேண்டும்

கேட்பதெல்லாம் தருபவனே - இன்று
பாதைமாற்றி கேட்கிறேன்..
நான்
மேலும் சாத்தானாகிட வேண்டும்.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (10-Nov-17, 8:49 pm)
பார்வை : 1024

மேலே