புதிர் போலிகற்பனை நான்

துரியோதனன் நான்
துட்சாதனன் நான்
கர்ணனைத் தவிர்த்து
கெளரவர்களின் மொத்தம் நான்;

மாற்றான் உடைமையேயானாலும்
விரும்பினால் அடையத்துடிக்கும்
இராவணன் நான்;

காப்பவன் சிரத்தையே
பதம்பார்க்கத் துடிக்கும்
கம்சனும் நான்

ஹா..ஹா..ஹா...

ஏய்..
மங்கையுருவ பேதையே.,
நீ மாத்திரம் அல்ல,
என் திருமுடிகாணா
அத்தனை
சிந்தைக் கண்களுக்கும்,
புதிர் போலிகற்பனையே நான்.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (10-Nov-17, 9:18 pm)
பார்வை : 1385

மேலே