நாணயம்
நகரும் நாட்கள் நரகமாகும்
நாணயம் தவறும்
நல்லதும் உள்ளதும் நிலைமாறும்
உணர்வும் உறவும் நிறம் மாறும்
ருசியும் பசியும் தரம் மாறும்
மகிமையும் பொய்மையும்
உன்னை சாரும்
அவமானமும் தன்மானமும்
தடம் மாறும்
அறிவும் ஆசையும்
அடக்கமாகும்
அன்பும் அழகும்
அகன்று போகும்
ஆ.கார்த்திக்