காதலி,உன் பதிலுக்காக

உன் விசித்திர விழிப்பார்வையில் விழுந்த நான்,
இன்னும் விழித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.
உறக்கம் தொலைத்துவிட்ட என் விழிகள்,
உலாவிக் கொண்டிருக்கின்றன உன் வருகையைத் தேடி.
தினம் உன்னை பார்க்கும்படி,
திரும்ப திரும்ப நெஞ்சம் ஏங்குதடி.
சுழலும் உன் விழிகளைப் பார்த்தால்,
சுனாமி கூட அடங்கிப் போகும்.
மினுமினுக்கும் உன் கன்னங்கள் இரண்டும்,
மின்னல் ஒளியையும் மிஞ்சிவிடுமே!
கவர்ந்து இழுக்கும் உன் பேச்சில், கரைந்து போகுமே கல் கூட.
சிரிக்கும் உன் உதடுகள்தான்,
சிலப்பதிகார ஏடுகள் ஆனதோ!
சுற்றும் பூமியும் சற்று யோசிக்கிறது,
வானத்தில் வாழ்ந்த நிலா,
வந்திறங்கியது எப்போது என்று.
சிலைபோல வந்து என்னை,
சிறை வைத்து சென்றவளே,
காலங்கள் பல சென்றாலும்,
நீ காதலிப்பது மட்டும் உண்மையென்றால்,
காத்திருப்பேன் உன் பதிலுக்காக,
கல்லறைக்குச் செல்லும் வரை.