தஞ்சம் உன் பாதமடி
சிட்டாக நீ துள்ளித்திரிந்தாய்
சிறை எடுத்தேன் உன்னையே.....
இன்று பட்டு நீ சுருங்கினாலும்.....
என் பாதை உன்னுடனே....
உன் பச்சை தாவணியும் பஞ்சு மிட்டாய் ரவிக்கையும்
பஞ்சத்து ஆண்டியாய் என்னை சுழலவிட்டது
பஞ்சுத் தலையாகி பாதி நீ தேய்ந்தப் பின்னும்
எஞ்சிய என் நாட்கள் எலாம் தஞ்சம் உன் பாதமடி...
கவிதாயினி அமுதா பொற்கொடி