ம. ரமேஷ் – சென்ரியு கவிதைகள்

1. அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு ?
போய்ப் படி

2. பாவ மன்னிப்பு
கேட்டுக் கொண்டிருந்தார்கள்
தேவாலயங்களில் இந்துக்கள்

3. காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

4. குழந்தைகள் கூடி
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

5. காதல் கவிதைகளை எரித்தேன்
சாம்பலிலிருந்து பிறந்தது
என் காதல்

6. முதன் முதலாக
அம்மா என்றது குழந்தை
வேளைக்காரியைப் பார்த்து

எழுதியவர் : ம. ரமேஷ் (29-Jul-11, 10:31 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 406

மேலே