என்னில் எண்ணில் ஒரு காதல்
என்
ஒரு இதயம் துடிப்பது,
உன் தமிழிற்காக!
என்
இரு கண்கள் இருப்பது,
தமிழ் உன்னைக் காண!
என்
முப்பொழுதும் கழிவது,
உன் நினைவுகளால்...
என்
நான்கு திசைகளிலும் தெரிவது,
உன் முகம் மட்டும்....
என்
ஐம்புலன்களும் உணர்வது,
உன் தமிழ்க் காதலை....
என்
அறுசுவைகளின்
இனிய சுவை நீயே!!
ஏழு சுரங்களையும்
தாண்டிய,
எட்டாத தமிழிசை நீ!!!
நவ ரத்தினங்களும்
தோற்றுப்போகும்
உன் தமிழின் முன்னால்...
உன்னைப் பற்றிப் பேச
என் வாழ்க்கை
பத்தாதடா...!!
என் தமிழ்க்கவிஞனே!!!!