காதலின் மிச்சம்
வருடங்கள் ஓடியபின்
பிள்ளைகள் நம் காதல் கதை சொல்லும்
கோல் பிடித்து நடந்தாலும்
உன் கை பிடித்து செல்ல வேண்டும்
வாழ்ந்த வாழ்கை
நினைவுகளாய் பயணப்பட்டாலும்
கனவிலும் உன்னிடம் மட்டுமே
காதல் கொள்ள வேண்டும்
மறதி என்னை முழுமையாய்
ஆட்கொள்ளும்போதும்
மறக்காமல் உன்
நினைவு மட்டுமே இருக்க வேண்டும்
கண் திறந்து பார்க்கும்போதும்
உன் உருவமே இருக்க வேண்டும்
கடைசியாய் கண் மூடும்போதும்
என் விழியில் உன் உருவமே பதிய வேண்டும்
உற்றாரும் மற்றவரும்
என் பிறவிகடனை முடிக்கும்போது
நீ மட்டும் என் பக்கத்தில் நிற்க வேண்டும்
நிதானமாய் நிதர்சனமாய்
நீ என்னை வழியனுப்பும்போதும்
நீண்ட என் உறக்கம் கூட
நம் காதல் கதையின் மிச்சமாகவே இருக்க வேண்டும்