வரவும், செலவும்

வரவுக்குள் செலவு என்றால் வாழ்க்கை சுகம்.
வரவுக்கு மேல் செலவு என்றால் வாழ்வில் என்ன சுகம்.
பிறர் வாழும் வாழ்க்கை நமக்கில்லையென்று,
நமது எல்லை எது என்று அறிந்து வாழ்வது சுகம்.
இல்லாதவைக்கு ஏங்காமல்,
இருப்பதில் திளைப்பது சுகம்.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்,
அளந்து, அறிந்து செய்வது நலம்.
அன்பு, பண்பு, பாசம், நேசம்,
காட்டி வாழ்தல், உயர்வுக்கு பலம்.

எழுதியவர் : arsm1952 (12-Nov-17, 7:34 pm)
பார்வை : 152

மேலே