கரும்பாறையின் கண்ணீர்த்துளி

எக்காலகிழமைகளாலும் அழிக்கமுடியாத
நம் தற்கிழமை பந்தத்தொடர்பை
அழியா கரும்பாறைகளிலே பொறித்துவைத்ததாய் ஞாபகம்..

எத்தனை இயற்கை இடர்பாடுகளை சந்தித்தும் துளி சேதமின்றி
உயிர்ப்புடனே இருக்கும் அப்பாறை, அறுநூறாண்டுகால விண்நீர்துளிகளில் நனைந்து இன்றும் நீரில் மூழ்கியே வாழ்கிறது.

வெளிப்பார்வைக்கு தண்ணீரில் எழுதப்பட்டதாய் தெரியும் அவ்வார்த்தைகள்
உனக்கும் அப்படியே எனும்பொழுதுதான் தோன்றுகிறது.,
தண்ணீரில் மூழ்கிய இக்கரும்பாறையின் கண்ணீர்த்துளி.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (13-Nov-17, 5:52 pm)
பார்வை : 268

மேலே