கவிதைகளும் தத்துவங்களும் V

௧, விருந்துடன் மகிழ்ச்சியாய்
வியாபாரம் நடக்கிறது
வரதட்சணை சீர்வரிசை என்று


௨, உன்னை கவிதையாய் எழுதி
கற்பனையாக்க விரும்பவில்லை
நீயென்பது நிஜமானால்
என் உடலினுள் கலந்திருக்கும்
உயிரைக் கேட்டுப்பார்
அதுவும் உன் பெயரையே சொல்லும்


௩, பெறுபவனை பிச்சைக்காரனாக்கிவிடக் கூடாது உதவி


௪, நீ சிரிக்கும் நேரம்
உன் கன்னத்தில் தோன்றும்
பூனைக்குறும்புகளைக் காண
நிலவும் விடுமுறைபெற்று வருகிறது
அமாவாசை என்ற பெயரில்


௫, உறக்கம் வரா இரவுகள் அனைத்தும்
ஓய்வுக்கானது அல்ல
உழைப்பிற்கானது

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (13-Nov-17, 7:51 pm)
பார்வை : 1773

மேலே