என்ன ஆகுமோ மானிடம் இனி
பிறபெண் பின் போகும் ஆணெல்லாம் ஒரு இனம்
போதையின் பின் போகும் ஆணெல்லாம் ஒரு இனம்
இவர்களுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் மட்டும்
உத்தமிகளாக வாழ்ந்து முடித்தே
மடிந்திட நினைக்கும் ஒரு இனம்
ஆணினம் மட்டும் வல்லினமாய்
வாழ்ந்த காலங்கள் இனி
ஆதிகாலமாக ஆகிபோகுமோ
பெண்ணினத்தின் மெல்லினங்களுக்குள்ளும்
பல வல்லினங்கள் உருவாக ஆரம்பிக்கும்
கடினமான காலகட்டம் இது
என்ன ஆகுமோ மானிடம் இனி